வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

இயக்குனர் கஸ்தூரிராஜா மூத்த மகனும் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் முதலில் தனது 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்த சோனியா அகர்வாலை 2006ல் காதல் திருமணம் செய்தார். 2010ல் இருவரும் சட்டப்படி பிரிந்தனர். பின் தன்னிடம் பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்தார். தமிழகத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர் பி எஸ் ராமன் குடும்பத்தை சேர்ந்தவர் கீதாஞ்சலி. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவன் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டோக்களையும் கீதாஞ்சலி நீக்கி உள்ளார். இதனால் இருவரும் பிரிகிறார்களா என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்துள்ளது. ஒரு தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரியும் போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள் போட்டோ மற்றும் செய்திகளை நீக்கி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கீதாஞ்சலியும் தன் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து செல்வராகவன் போட்டோவை நீக்கி உள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்வராகவன் சமீபத்தில் நடித்து வெளியான 'ஆர்யன்' படம் சார்ந்த ஒரு நிகழ்வில் பேட்டியளிக்கையில், ''பெரிய சம்பவத்தில் உயிரிழந்து கல்லறை சென்று மீண்டும் உடைத்து வந்துள்ளேன். 6 மாதங்களில் உங்களுக்கு தெரியும்'' எனப் பேசியிருந்தார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருவதால், செல்வராகவன், கீதாஞ்சலி இருவரும் மணவாழ்வில் பிரிகின்றனர் என்கின்றனர்.
செல்வா தம்பியும் நடிகருமான தனுசும் தனது மனைவியை ஐஸ்வர்யாவை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




