டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

திருப்பூர்: ''புதிதாக திரைக்கு வரும் சினிமாக்கள், 100 நாளுக்கு பிறகே, ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும்; இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்போம்'' என, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறினார்.
@subtitle@அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:@@subtitle@@
தமிழகத்தில், 1,168 சினிமா தியேட்டர்கள் உள்ளன. அதில், 60 சதவீத தியேட்டர்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன. புதிய படங்கள், தியேட்டர்களில் ரிலீசாகி நான்கு வாரத்தில் ஓ.டி.டி.யில் வெளியாவதால், தியேட்டருக்கு வருவோர் எண்ணிக்கை சரிந்துவிட்டது. இந்தியாவில் தியேட்டர் கட்டணம் குறைவாக இருப்பது தமிழ கத்தில் தான்; ஆனாலும் பல தியேட்டர்கள் மூடும் நிலைக்கு வந்து விட்டன. எனவே, புதிய படங்கள், தியேட்டர்களில் ரிலீசாகி, 100 நாள் கழித்த பிறகு தான் ஓ.டி.டி.யில் திரையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அதற்கு சம்மதிக்காத நிறுவனங்களின் படங்களை, தியேட்டர்களில் திரையிட மாட்டோம். இது தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.
பெரிய நடிகர்கள், 25 முதல், 150 கோடி ரூபாய், அதற்கு மேலும் சம்பளம் வாங்குகின்றனர். தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படுகிறது; இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் தான், பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்பே தற்போது நடக்கவில்லை. அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இருக்கின்றனர். அதிக சம்பளம் வாங்கும் நடிகையுடன் வரும் சிகை அலங்கார நிபுணருக்கு, சம்பளம் தவிர்த்து, தினசரி படியாக 25 ஆயிரம் ரூபாய் வரை தயாரிப்பாளர்களே வழங்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, பிரபல நடிகர்களுடன் 6 பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளத்துடன், தினசரி படியும் வழங்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இந்த தொகையை தயாரிப்பாளர்கள் தலையில் சுமத்துவது நியாயமல்ல.
எம்.ஜி.ஆர். சினிமாவில் பிசியாக இருந்தபோது, குண்டு கருப்பையா, குண்டு மணி போன்றோர் தான் அவருக்கு பாதுகாவலர்களாக வருவார்கள். அவர்களுக்கு எம்.ஜி.ஆர் தான் சம்பளம் கொடுப்பார். ஆனால் இப்போது சொந்த காரில் வரும் நடிகர், நடிகையர் சிலர், பெட்ரோல் செலவு என்று தயாரிப்பாளர்களிடம் கறக்கின்றனர். இது நியாயமா என யோசிப்பதே இல்லை. பணம் போட்டு படம் தயாரிக்கும் முதலாளிகளை வாழ வைக்க வேண்டும்; அப்போது தான் சினிமா துறை பிழைக்க முடியும். இவ்வாறு, சுப்பிர மணியம் கூறினார்.