ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

இயக்குனர் செல்வராகவன் தான் அறிமுகப்படுத்திய நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர், பின்னர் விவாகரத்தும் செய்து கொண்டனர். அதற்பிறகு பிரபல ஆடிட்டர் குடும்பத்தை சேர்ந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு மகள், இரண்டு மகன்கள். தற்போது செல்வராகவன், கீதாஞ்சிலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து செல்வராகவன் படங்கள் அனைத்தையும் கீதாஞ்சலி நீக்கியதை தொடர்ந்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தது.
இதுகுறித்து கீதாஞ்சலி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் செல்வராகவன் சில மாதங்களுக்கு முன் அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி உள்ளது.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி வந்து உட்கார்ந்து இருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று கூறலாம். இதற்கு என்ன காரணம் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். விரைவில் உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
அவர் அப்போது இப்படி பேசிய விஷயம், இவர்கள் இடையேயான பிரிவை தான் குறிப்பதாக வலைதளங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.