அப்பா ஆகப்போகும் அவினாஷ் | வெப்சீரிஸில் கமிட்டான ஆயிஷா - புவியரசு | வெள்ளித்திரையில் நுழையும் மகா நடிகை போட்டியாளர் | பொங்கல் போட்டியில் இணைந்த 'மத கஜ ராஜா' : 12 ஆண்டுகளுக்கு பின் விமோசனம் | திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் |
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், அதையடுத்து கோவிந்த் மாலினேனி பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் அவரது 107வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா என்ற படத்தில் கமிட்டாகி இருந்த ஸ்ருதிஹாசன் இன்று முதல் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சிரஞ்சீவி உடன் இணைந்து அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸான கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவி வால்டேர் வீரய்யாவாக நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி உடன் நடித்த லாபம் படத்திற்கு பிறகு எந்த புதிய படத்தில் நடிக்காத ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.