சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கித்துவம் கொடுக்கும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. இன்றைய நாயகிகளில் அனுஷ்கா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகள் அப்படியான படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் வசூல் ரீதியாக எதையுமே சாதிக்கவில்லை. அதேசமயம் அனுஷ்கா நடித்து வெளிவந்த 'ருத்ரமாதேவி, அருந்ததி, பாகமதி' ஆகிய படங்கள் நல்ல வசூலைப் பெற்றன. கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த 'மகாநடி' படமும் நல்ல வசூலைக் குவித்தது.
தற்போது அவர்களை மிஞ்சும் அளவிற்கு 'லோகா' படத்தின் மூலம் வசூலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதுவரையில் 'மகாநடி' படம் மூலம் 84 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்த சக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷை கல்யாணி பின்னுக்குத் தள்ளி இருக்கிறார்.
இதுவரையில் மலையாளத்தில் இப்படி ஒரு பெரிய வசூலை வேறு எந்த மலையாள நாயகியும் பெற்றதில்லை. கீர்த்தி சுரேஷ் நடித்து பெற்ற 'மகாநடி' தெலுங்குப் படம். 'லோகா' வெற்றியின் மூலம் கல்யாணிக்கு மேலும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.