சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி |

தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வருகிறது. இதனால், எந்தவிதமான தெலுங்கு திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா அமைச்சர்களை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார். தொழிலாளர் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தாங்கள் கேட்கும் ஊதிய உயர்வில் எந்தவிதத்திலும் பின்வாங்க மாட்டோம் என தொழிலாளர் தரப்பில் உறுதியாக உள்ளார்களாம்.
இதனிடையே, ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர சீனியர் நடிகரான சிரஞ்சீவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று இரு தரப்பினரையும் அழைத்து அவர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அது இன்றும் தொடர்கிறது. தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனியாக ஊழியர்களை நியமித்து படப்பிடிப்பைத் தொடர பேசி வருகிறார்களாம்.
இந்த ஸ்டிரைக் காரணமாக படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.




