காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‛கூலி' படத்தின் வசூல் 550 கோடியை தாண்டிவிட்டது. படம் வெளியாகி 2 வாரங்கள் தாண்டிய நிலையில், இதுவரை படத்தின் மொத்த வசூலை படக்குழு அறிவிக்கவில்லை. 404 கோடி வசூல் என்பதுடன் நிறுத்திக் கொண்டது. ஆனாலும், படத்தில் நடித்தவர்கள், டெக்னிஷியன்கள் மத்தியில் இதுவரை படம் 550 கோடி வசூலித்துள்ளது என்று கிசுகிசுக்கப்படுகிறது.
ஆயிரம் கோடி வசூல் என்று எதிர்பார்த்த படம், பாதியில் நிற்பதால் ஓரளவு ஏமாற்றம் என்றாலும், இது தோல்வி படம் அல்ல, அனைவருக்கும் லாபத்தை கொடுத்த படம்தான் என்கிறார்கள் கோலிவுட்டில். படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தபோது வெளிநாட்டில் இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் ஓய்வு எடுத்து வருகிறார். தான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்காக தாய்லாந்தில் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் என்று கூறப்பட்டது.
இப்போது லோகேசும் தமிழகம் திரும்பிவிட்டார். ஆனாலும், அடுத்த படம் குறித்து, ரஜினி, கமல் இணையும் படம் குறித்து இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் கூலி ஆயிரம் கோடியை எட்டவில்லை. ஆனால், அடுத்து ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படம், ஆயிரம் கோடியை தொட வாய்ப்பு. அதிலும் பாலகிருஷ்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போதே பேச தொடங்கிவிட்டார்கள்.