சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இயக்குனராக மாறி விருதுக்கான படங்களாக இயக்கி வருகிறார். அதிலிருந்து சற்று மாறி, கமர்சியல் அம்சங்களுடன் தற்போது கன்னடத்தில் பிரபல முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் டாக்ஸிக் என்கிற படத்தை இயக்கி வருகிறார் கீது மோகன்தாஸ்.
இந்த நிலையில் இவருக்கும் யஷ்ஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது படத்தின் பல காட்சிகளை நடிகர் யஷ் தான் இயக்கி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சுதேவ் நாயர் என்பவர் இது பொய்யான தகவல் என இது குறித்து கூறியுள்ளார்.
“இது சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நான் பணியாற்றிய படங்களிலேயே அழகாக, டென்ஷன் இல்லாமல் இயங்கி வரும் படக்குழு என்றால் அது இதுதான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனரும் மற்றும் ஹீரோ யஷ் இருவருமே எந்த ஈகோவும் இன்றி ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்வதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இவர்கள் இருவரது நோக்கமும் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.