ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

கடந்த 30 வருடங்களாக மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். மலையாளத்தில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார்.. தமிழில் அஜித் நடித்த ஜனா, விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்த ஷாஜி கைலாஷ் 2013 வெளியான ஜிஞ்சர் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
இந்தநிலையில் இவரது இயக்கத்தில் தற்போது கடுவா என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விவேக் ஓபராய் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று மலையாளத்தில் வெளியான இந்தப்படம் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
பிரித்விராஜ் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியது போன்று நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக இது வெளியாகி உள்ளது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல இயக்குனர் ஷாஜி கைலாஷ் மீண்டும் தனது பார்முக்கு திரும்பிவிட்டார் என்றும் அவரை பாராட்டி வருகிறார்கள்.. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாஜி கைலாஷ் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




