விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் | தயாரிப்பாளர் சங்க தலைமையை மாற்ற வேண்டும் : பெண் தயாரிப்பாளர் போர்க்கொடி | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' 2025க்கு தள்ளி போகிறதா? | தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் | திருமண செய்தி : திவ்யா ஸ்பந்தனா கோபம் | மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் அகாண்டா. இந்த படத்தில் கஜேந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நிதின் மேத்தா. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது பலருக்கும் தெரிந்திராத விஷயம். இந்திய ராணுவத்தில் இருபத்தொரு வருடங்கள் பணியாற்றி லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து 2016ல் ஓய்வு பெற்ற நிதின் மேத்தா அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே அதற்காக தாடி வளர்க்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஏதேச்சையாக விமான நிலையத்தில் இவரை சந்தித்த ஒரு இயக்குனர் தாடியுடன் இருந்த இவரது தோற்றத்தைப் பார்த்து தான் இயக்கிய விளம்பர படத்தில் இவரை நடிக்க வைத்தார். அதைத்தொடர்ந்து பேஷன் ஷோக்கள், டிவி விளம்பரங்கள் என ஓரளவு வாய்ப்புகள் நிதின் மேத்தாவை தேடி வர ஓரளவு பிரபலமாக ஆரம்பித்தார். அந்த சமயத்தில்தான் பாலகிருஷ்ணாவுடன் அகாண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் மூலம் இவர் மீது வெளிச்சம் விழ தற்போது சில படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தள்ளது. அந்த வகையில் விரைவில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி ஆகியோரிடம் அடி வாங்குவதற்காக காத்திருக்கிறேன் என்று பிரபல ஹீரோக்களின் படங்களில் வில்லானாக நடிக்க விரும்பும் தனது ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார் நிதின் மேத்தா