'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சாய்பல்லவி மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் கார்கி. மூன்று வருடங்களுக்கு பிறகு சாய்பல்லவி நடிப்பில் தமிழில் வெளியாக இருக்கும் படம் இது. தமிழில் முதன்முதலாக நிவின்பாலி அறிமுகமான ரிச்சி என்கிற படத்தை இயக்கிய கவுதம் ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜூலை-15ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை தமிழில் சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை கன்னடத்தில் வெளியிடும் உரிமையை நடிகர் ரக்சித் ஷெட்டி பெற்றுள்ளார். இந்த படத்தை வெளியிடுவதற்கு ஒரு ஆச்சரிய பின்னணியும் உண்டு. கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் உள்ளிடவரு கண்டந்தே. இந்த படத்தைத்தான் நிவின்பாலியை வைத்து ரிச்சி என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் கவுதம் ராமச்சந்திரன். இந்த நிலையில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கிய படத்தை கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி வெளியிடுவது ஆச்சரியமான ஒற்றுமை தான்,