ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனதால் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சார்லி 777 மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் பார்ட்டி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகராக மாறி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் பேச்சுலர் பார்ட்டி என்கிற படம் வெளியானது.
இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜூன் ராமு என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து எம்ஆர்பி மியூசிக் நிறுவனத்தின் அனுமதியின்றி அவர்களது பாடல்களை ரக்ஷித் ஷெட்டி பயன்படுத்தியதை விசாரணையில் உறுதி செய்த நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டு தொகையாக இருபது லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை 15ம் தேதி, இந்த பிரச்சனை குறித்து ஆ சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த பதிவில் சில நொடிகள் இசையை பயன்படுத்தியதற்காக எம்ஆர்பி மியூசிக் நிறுவனம் அதிகபட்ச தொகை கேட்பதாக விமர்சித்திருந்தார். அந்த பதிவையும் அவர் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.