நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… |
கொனிடெலா வெங்கட் ராவ் - அஞ்சனா தேவியின் மூத்த மகன் கொனிடெலா சிவ சங்கர வர பிரசாத். இது சிரஞ்சீவியின் நிஜப்பெயர். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ஆனவர்களில் மிக முக்கியமானவர் சிரஞ்சீவி.
சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிப்பது பற்றிய ஆர்வம் அவருக்குள் ஏற்பட, காமர்ஸ் படிப்பை முடித்துக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வருகிறார். ஆஞ்சநேயர் மீது மிகுந்த பக்தி கொண்ட அவரது குடும்பம், "ஆஞ்சநேயர் போல சிரஞ்சீவியாக இரு" என வாழ்த்தியதோடு ஆஞ்சநேயரின் இன்னொரு பெயரான சிரஞ்சீவி என்பதையே அவருக்கு சினிமா பெயராகவும் சூட்டி அனுப்பி வைத்தனர்.
சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாகவும், ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவும் பல படங்களில் நடித்தார். அப்போது உடன் நடித்தவர்கள் "நீ எல்லாம் சூப்பர் ஸ்டாராக போகிறாயா? வேறு வேலை இருந்த போய் பாரு" என்று கிண்டலும், கேலியும் செய்தார்கள். சிரஞ்சிவி அப்போது முடிவு செய்தார். சூப்பர் ஸ்டார் ஆகி காட்டுவது என்று.
அவமானங்களை, புறகணிப்புகளை தாண்டி கடின உழைப்பால் சூப்பர் ஸ்டார் ஆனார் சிரஞ்சீவி. 150 படங்களை தாண்டிய ஹீரோ, மகன், அண்ணன், தம்பி ஆகியோரையும் நடிகராக்கியவர், மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் என மக்கள் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் சிரஞ்சீவிக்கு இன்று வயது 70.