பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... |
எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும் நியூ பிச் நிறுவனம் சார்பில் ஹரிசங்கர் ஜனார்த்தனம், விதுசன் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'இன்புளூயன்சர்' . நீரோ கில்பர்ட் இயக்கியுள்ளார். சிவசாந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து நடிகை புளோரன்ஸ் சிம்ப்சன் நாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும் நடிக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த துளிகா மரப்பனா, பியங்கா அமரசிங்கே, வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் நீரோ கூறும்போது "ஒரு வெளிநாட்டு தம்பதி, இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் ஒரு காட்டுக்குள் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது அவர்கள் பயங்கரமான திருப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அது என்ன? அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் கதை. பவுண்ட் புட்டேஜ் படமாக இலங்கை காடுகளில் படமாகி" உள்ளது என்றார்.