பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... |
சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படம் 'விஸ்வம்பரா'. வசிஷ்டா இயக்கும் இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார். சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையிடம் கதை சொல்லும் வாய்ஸ் ஓவரில் ஓடத் தொடங்கும் இந்த டீசரில் பழங்காலத்தில் நடந்த ஒரு யுத்தத்தை பற்றி சொல்லப்படுகிறது.
பேண்டஸி, ஆன்மீகம், போர் ஆகியவை கலந்து காட்சிகள் இடம்பெறுகிறது. ஒரு கற்பனையான ராஜ்யத்தில் ஒரு இனமே அழிக்கப்படுகிறது. அதில் தப்பி பிழைக்கும் நாயகன் தன் இனத்தை அழித்தவர்களை பழிவாங்குவது மாதிதிரியான கதை அமைப்பை டீசர் சொல்கிறது.
டீசர் முழுக்க வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. வெட்டப்பட்டு துண்டாக பறந்து செல்லும் கை, மார்பை துளைத்து முதுகு வழியாக வெளியே வரும் ஈட்டி. சிரஞ்சீவியின் கையில் இருக்கும் கண் என ஒரு நிமிட வீடீயோவிலேயே ரத்தம் தெறிக்கிறது. சிரஞ்சீவிக்கான மாஸ் அறிமுகமும், கீரவாணியின் விறுவிறுப்பான இசையும் டீசரை ரசிக்க வைக்கிறது. முதல் டீசர் கேலிக்கு ஆளான நிலையில் இந்த டீசர் ஆறுதல் படுத்துவதாக உள்ளது.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.