லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஆகஸ்ட் 22ம் தேதி வெளியான படம் 'இதயக்கனி'. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆரை தூக்கி நிறுத்திய படம். படம் வெளியான இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார். 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' என்ற பாடல் அவர் கட்சியின் தேசிய கீதமாக பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
சத்யா மூவீஸ் தயாரிப்பான 'இதயக்கனி' பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. ஹிந்தி நடிகை ராதா சலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.
ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். "மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்' என்று எம்ஜிஆர் பற்றி அண்ணாதுரை பேசியதுடன் தொடங்கும் படம். ஒரு கொலைக் குற்றம் தொடர்பான புலனாய்வு படமாக வந்தாலும் எம்ஜிஆர் முன்னெடுக்க இருந்த அரசியலையும் நிறைய இடங்களில் பேசியது.
அதோடு பக்கா கமர்ஷியல் படமாகவும் உருவானது. 'இன்பமே...' , 'இதழே இதழே தேன் வேண்டும்', 'தொட்ட இடமெல்லாம்' பாடல்கள் இன்றைக்கும் கண்ணை கவரும் கவர்ச்சி பாடல்கள்தான். ஒரு ஆங்கில பாடலை உஷா உதுப் பாடினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ராஜாங்கத்தையே நடத்தினார்.
ஒகேனக்கல், பெர்க்காரா, பிச்சாவரம் என அழகான இடங்களில் படமாகி இருந்தது. பின்னாளில் வெள்ளை ரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்த ஜெகநாதன் இந்த படத்தை இயக்கினார்.