காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பெரும்பாலும் நடிகைகள் நடிப்பதுடன் ஒரு சிலர் கூடுதலாக போனால் பாடுவது என்பதோடு மட்டும் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக மலையாளத்தில் நடிகைகள் சிலர் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திலும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தற்போது நடிகர் திலீப் நடித்து வரும் பா பா பா என்கிற படத்திற்கு கதை எழுதி உள்ளார். அதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தின் வெற்றிக்கு தனது திரைக்கதை அமைப்பால் உறுதுணையாக நின்று இருக்கிறார் நடிகை சாந்தி பாலச்சந்திரன்.
இவர் இந்த படத்தின் மூலம் தான் திரைக்கதை ஆசிரியராக மாறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017ல் நடிகர் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாந்தி பாலச்சந்திரன். அந்த படத்தின் இயக்குனர் டொமினிக் அருண் தான் தற்போது இந்த லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தை இயக்கியுள்ளார். அதனால் சாந்தி பாலச்சந்திரனின் கதை உருவாக்கும் திறமையை அறிந்து கொண்டு அவரை இந்த படத்தில் திரைக்கதை எழுத உற்சாகப்படுத்தினாராம். தற்போது படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன்.