பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் 'கூலி'. இப்படம் 500 கோடி வசூலைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு புதிய படம் வெளியானால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும். அந்த விதத்தில் இப்படமும் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகலாம். எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஹிந்தியில் வெளியிட முடியும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிட்டதால் அப்படியான ஒப்பந்தம் தான் போடப்பட்டுள்ளது.
கலவையான விமர்சனங்கள் வந்த நிலையிலும், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை ஒரே ஒரு முறைதான் அறிவித்தார்கள். அதன்பின் என்ன காரணத்தாலோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.