சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' |
இந்த வருட ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம், பஹத் பாசில் நடிப்பில் ஓடும் குதிரை சாடும் குதிரை மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்கள் வெளியாகின. தொடரும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெளியாகும் மோகன்லால் படம் என்பதால் ஹிருதயபூர்வம் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோலத்தான் பஹத் பாசில் படமும். ஆனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறிவிட்டன. அதே சமயம் சூப்பர் வுமன் கதை அம்சத்துடன் வெளியாகிய கல்யாணி பிரியதர்ஷனின் லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
படம் வெளியான மறுநாளில் இருந்தே இந்த படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது எந்த அளவிற்கு என்றால் மோகன்லால், பஹத் பாசில் படத்தை விட கல்யாணியின் படத்திற்கு காட்சிகள் அதிக அளவில் திரையிடப்பட்டுள்ளன. இன்று (ஞாயிறு) கொச்சியில் உள்ள திரையரங்குகளில் மட்டும் லோகா 196 காட்சிகளும் ஹிருதயபூர்வம் 134 காட்சிகளும் ஓடும் குதிரை சாடும் குதிரை 82 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளதே இதற்கு சான்று. கேரளா முழுவதிலும் கல்யாணியின் படத்திற்கு காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.