'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மோகன்லால் நடித்த வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன். தற்போது மோகன்லாலுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்து ஆராட்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜூ இதில் வில்லனாக நடித்துள்ளார். நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியானது.
ஆச்சர்யப்படுத்தும் விதமாக இந்த டிரைலரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். நான் கேங்ஸ்டரும் அல்ல.. மான்ஸ்டரும் அல்ல.. சினிஸ்டர் என மோகன்லாலின் வசனமே மாஸாக இருக்கிறது. ரசிகர்களை இன்னும் இடையில் கொஞ்ச நாட்கள் மோகன்லாலின் படங்களில் விடுபட்டுப்போன கமர்ஷியல் அம்சங்களை எல்லாம் இந்தப்படத்தில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்றே தெரிகிறது.
அதற்கேற்றபடி மோகன்லாலுக்கு புலிமுருகன் என்ற வெற்றி படத்தை கொடுத்த கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். குறிப்பாக எண்பதுகளில் ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே மோகன்லாலை மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது.
வெளியான ஒரே நாளில் இதுவரை 2.5 மில்லியன் பேர் இந்த டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர். டிரைலர் தந்த உற்சாகத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.. சமீப காலமாக மோகன்லாலின் படங்கள் பெரும்பாலும் ஒடிடியில் வெளியாகி வந்த நிலையில் இந்தப்படம் தியேட்டர்களில் தான் ரிலீஸாக இருக்கிறது என்பதையும் டிரைலரிலேயே அறிவித்துள்ளனர்.