ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிக்கி. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த படத்திற்காக 7 ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து வைத்துள்ளதாக பட நிறுவனமும், கதாநாயகன் நானியும் கூறியுள்ளனர். அந்த விதமாக ஏப்ரல் 29 முதல் ஜூன் 27 வரையிலான 7 வாரங்களில் மற்ற பெரிய படங்களின் ரிலீசுக்கு ஏற்றபடி தேதிகளை மாற்றிக்கொண்டு எந்த ஒரு வாரத்திலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்ய தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது நிலவும் அசாதாரண சூழலில் பெரிய நடிகர்களின் படங்கள் 2 ரிலீஸ் தேதிகளை தங்களது படத்துக்காக தேர்வு செய்யும்போது, நாங்கள் 7 ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்யக் கூடாதா என நானி தனது சோசியல் மீடியா பக்கத்தில் கேட்டுள்ளார் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக அதன் தயாரிப்பு நிறுவனம் இது அல்லது அது என இரண்டு ரிலீஸ் செய்திகளை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டது, இதை சுட்டிக் காட்டியே நானி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.