இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஓஜி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை சுஜித் இயக்கியிருந்தார். இவர் கடந்த 2019ல் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தை இயக்கியவர். சாஹோ படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது ஓஜி படத்தின் வெற்றி அவரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் இயக்க தயாராகி விட்டார். இவரது புதிய படத்தில் கதாநாயகனாக நானி நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த படம் பூஜையுடன் துவங்கி உள்ளது. இதன் துவக்க விழா பூஜையில் நடிகர் வெங்கடேஷ் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்.