பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் |

மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் இவர் ஒரு இயக்குனரும் கூட. நான்கு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் தற்போது மலையாள படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து கூறும்போது, மம்முட்டி போன்ற மிகப்பெரிய நடிகருடன் நடிப்பது ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லக்கூடியது என்பதில் கூடுதல் சந்தோசம். நிச்சயமாக மலையாள ரசிகர்கள் என்னை வில்லனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.