'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கடந்த 2017-ல் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கினார் மலையாள நடிகர் திலீப். இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறை வாசம் அனுபவித்த பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். கிட்டத்தட்ட அந்த வழக்கில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்கிற நிலையில், முன்னாள் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் மீது சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை போலீசில் கூறினார்.
அதாவது திலீப் ஜாமினில் வெளிவந்த பிறகு பாதிக்கப்பட்ட நடிகையின் கடத்தல் தொடர்பான வீடியோக்களை தனது காரில் அமர்ந்தபடி பார்த்தார் என்றும், அந்த வழக்கு விசாரணை செய்யும் அதிகாரிகளை கொள்வதற்காக ஆட்களை ஏவினார் என்றும் குற்றம் சாட்டினார். இவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் தற்போது திலீப் மீது புதிய வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்னும் திலீப்பிற்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திலீப் மீது குற்றம்சாட்டிய இயக்குனர் பாலச்சந்திர குமார் மீது தற்போது கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவர், கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக பாலச்சந்திர குமார் அறிமுகமானார். அடிப்படையில் நான் பாடகி என்பதால் அவரது படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறினார். மேலும் படத்திலும் என்னை நடிக்க வைப்பதாக கூறி, கொச்சியில் உள்ள அவரது வீட்டில் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். மேலும் என்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார் என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.
அதே சமயம் இவர் கூறும் இந்த சம்பவம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் இதில் ஆச்சரியம். இதுபோன்ற ஒரு அத்துமீறல் நடைபெற்று பத்து வருடம் கழித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது அந்தப் பெண் புகார் அளித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.