ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் | தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் |

அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக கோலோச்சியவர் ரகுவரன். நாயகன், வில்லன், குணசித்ரம் என பல பரிமாணங்களில் நடித்தவர். என்றாலும் அவரது வில்லன் கேரக்டர்களே இப்போதும் பேசப்படுகிறது. பயங்கரமாக சண்டை போட மாட்டார், நாயகனோடு கட்டி உருள மாட்டார், ஆனாலும் நாயகனுக்கு இணையாக வில்லத்தனத்தோடு எழுந்து நிற்பார். அவரது தனித்துவமான உடல் மொழியும், குரலும் அதற்கு காரணம்.
அவர் காலத்திய அத்தனை ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். ஆனால் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தில்லை. 'நாயகன்' படத்தில் நாசர் நடித்த கேரக்டரில் ரகுவரனை நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினார். ஆனால் கமல்தான் அந்த கேரக்ரில் நாசர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு செய்து நடிக்க வைத்ததாக கூறுவார்கள்.
ஆனால் ரகுவரன் நடிக்க மறுத்தாலேயே நாசர் நடிக்க வைக்கப்பட்டார். கமலுடன் நடிக்காதது குறித்து பின்னாளில் ரகுவரன் அளித்த நேர்காணல் ஒன்றில், ''கமலோட எந்த படத்தை வேணாலும் போட்டுப்பாருங்க, அவர் நடிக்கிற ஒவ்வொரு சீன்லேயும் அவர்தான் நிப்பாரு, எப்படிப்பட்ட சீனாக இருந்தாலும் அவரை தாண்டி யாரும் ஸ்கோர் பண்ண முடியாது. அவரோடு நடித்த டம்மி ஆகுறதை விட, நடிக்காம இருக்கிறதே நல்லதுன்னு முடிவு பண்ணினேன். அவர் நடிப்பு மேல இருந்த பயம்தான் காரணம்” என்று கூறினார்.