ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருவதும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதும் ஊர் அறிந்த விஷயம். காதல் விவகாரம் கசிந்த நேரத்தில், நாக சைதன்யாவுடன் ரகசிய சந்திப்புகளை தவிர்த்து வந்த சமந்தா, தற்போது சகஜமாக காதலருடன் பொது இடங்களில் காணப்படுகின்றார். விருந்து நிகழ்ச்சிகளில் நாக சைதன்யாவுடன் ஜோடியாக கலந்து கொண்ட சமந்தா தற்போது, நாக சைதன்யாவின் படப்பிடிப்பு தளங்களிலும் திடீர் விசிட் அடிக்க துவங்கியுள்ளார். பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு பின்னர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள், விசாகபட்டிணத்தில் நடைபெற்று வருகின்றன. ராகுல் ப்ரீத்தி சிங் நாக சைதயாவிற்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சமந்தா காதலர் நாக சைதன்யாவுடன் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்துள்ளார். படக்குழுவினரையும் சந்தித்து பேசி உற்சாகப்படுத்தியுள்ளார் சமந்தா.