தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
(பேபி) ஷாம்லி தற்போது 'வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி' என்கிற மலையாள படத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இல்லையா..? இந்தப்படத்தின் கதை 1990-ல் நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ரிஷி சிவக்குமார் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் டூரிங் டாக்கீஸ் தியேட்டர் ஆபரேட்டராக நடிக்கிறார் குஞ்சாக்கோ போபன். அதுமட்டுமல்ல கூடவே சைடு பிசினஸ் ஆக மைக்செட், சீரியல்செட், ட்யூப்லைட்டுகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றையும் நடத்தி வருவாராம்.
அந்த ஊரில் உள்ள ஷாம்லி மீது குஞ்சாக்கோவுக்கு காதல் வருகிறது. ஒருநாள் தியேட்டருக்கு வரும் ஷாம்லியை வழிமறித்து தன் காதலை சொல்கிறாராம் குஞ்சாக்கோ.. இந்த காட்சிதான் ஷாம்லிக்கும், குஞ்சாக்கோவும் இருவருக்குமாக படமாக்கப்பட்ட முதல் காட்சியாம். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் ஷாம்லியின் அக்கா ஷாலினி, மலையாளத்தில் 'அனியத்தி பிறாவு' என்கிற படத்தில் தனக்கு ஜோடியாக அறிமுகமானபோது கல்லூரிக்கு செல்லும் அவரை வழிமடக்கி குஞ்சாக்கோ தனது காதலை சொல்வதான காட்சிதான் முதலில் படமாக்கப்பட்டதாம். இப்போது தங்கைக்கும் அதேபோல காட்சி தன்னுடன் அமைந்தது கண்டு ஆச்சர்யப்படுகிறார் குஞ்சாக்கோ போபன்.