இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாண்டவர் இல்லம் தொடர் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானார் ஆர்த்தி சுபாஷ். இந்நிலையில், இவர் இண்ஸ்டாகிராமில் கழுத்தில் தாலியை பிடித்துக் கொண்டு விதவிதமாக திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைபார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் அவருக்கு திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் அது நிஜ திருமணமல்ல. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் ஆர்த்தி சுபாஷ் தற்போது நடித்து வருகிறார். அந்த தொடரில் அவர் நடிக்கும் பல்லவி கதாபாத்திரத்திற்கு திருமணம் நடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தான் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். முன்னதாக அதே சீரியலுக்காக எடுக்கப்பட்ட ஹல்தி நிகழ்ச்சி புகைப்படங்களும் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் ஆர்த்தி சுபாஷ்.