அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் அதே அளவு வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூலித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு உண்மை சம்பவத்தை படமாக்கியது ஒரு காரணம் என்றாலும் கமலின் குணா படத்தின் மூலம் புகழ்பெற்ற குணா குகையில் காட்சிகளை படமாக்கியதும், குணா படத்தில் இடம்பெற்று கண்மணி அன்போடு என்கிற பாடல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு, குறிப்பாக கிளைமாக்ஸில் நட்பின் ஆழத்தை உணர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது,
படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தில் குணா பாடலின் உரிமையை தன்னிடம் இருந்து முறையாக பெறாமல் பயன்படுத்தியுள்ளார்கள் என்று மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமீப காலமாக அவர் இப்படி தனது பாடல்களின் காப்பிரைட்ஸ் சம்பந்தமாக பல நடவடிக்கைகள் எடுத்து வருவதால் அதில் ஒன்றாக தான் இதுவும் பார்க்கப்படுகிறது.
அதேசமயம் குணா படத்தின் நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினர் இளையராஜாவை மரியாதையை நிமித்தமாக கூட சந்திக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாம் ஆண்டனி இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “குணா படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை தங்களிடம் வைத்துள்ள இரண்டு நிறுவனங்களிடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று தான் இந்த பாடலை நாங்கள் படமாக்கி உள்ளோம். ஆனால் இளையராஜாவோ இந்த பாடலின் முதல் உரிமைதாரர் நான் தான்” என்கிற விதமாக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.