ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் தொடர்ந்து அவருடன் தான் எடுத்துக் கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென்று சாந்தனுவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வதை நிறுத்தினார். இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளுக்கும் சோசியல் மீடியாவில் சாந்தனு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது அவர்களது பிரேக்அப்பை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள், தற்போது நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ருதிஹாசன், நான் சிங்கிள்தான் மிங்கிளாக விரும்பவில்லை. என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.




