குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது முன்னணி ஹாலிவுட் நடிகையாகவும் இருக்கிறார். தனது காதலர் நிக் ஜோனஸ் உடனான திருமணத்திற்குப் பிறகு ஹாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். ஆஸ்கர் விருது நிகழ்வை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட மற்ற பணிகளிலும் பிசியாக இருக்கிறார். பல்வேறு சர்வதேச தயாரிப்புகளின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியங்கா இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 358 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை அணிந்து அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறார். ரோமின் மிகப்பெரிய நகைக்கடையான 'பல்கேரி'யின் 140வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் புதிய உயர்தர நகை சேகரிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான் பிரியங்கா சோப்ரா 358 கோடி ரூபாய் வைர நகை அணிந்துள்ளார்.
இந்த விழாவில் பல்கேரி நிறுவனம் ஸ்பெஷலாக வடிவமைத்த பிரியங்காவின் இந்த நகைதான் அனைவரது கண்களையும் பறித்திருக்கிறது. 'செர்ப்பென்டி அட்ரினா' எனப் பெயர் கொண்ட இந்த நகையில் 140வது ஆண்டு விழாவை முன்னிட்டு 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பிரியங்காவுடன் ஹத்வே, லியூ இபை போன்ற ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.