ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

இந்த வருடத்தில் மலையாள திரையுலகம் ஜனவரியில் பெரிய அளவில் பிரகாசிக்க தவறினாலும் பிப்ரவரியிலிருந்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலான படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடிக்கு மேலும் 250 கோடி வரையிலும் வசூலித்தது தான். அந்த வகையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே வெளியான ஹிட் படங்களின் வசூல் ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.
இதில் மஞ்சும்மேல் பாய்ஸ் 240 கோடி, ஆடு ஜீவிதம் 157 கோடி, ஆவேசம் 153 கோடி என இந்த மூன்று படங்களே 550 கோடி வசூலை தொட்டு விட்டன. இவை தவிர பிரேமலு, பிரம்மயுகம், வருஷங்களுக்கு சேஷம் என இன்னும் சில படங்கள் சேர்ந்து ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிட்டன. அதேசமயம் கடந்த 2023ல் மலையாள சினிமாவின் மொத்த வசூலே 500 கோடி தான் என்பது இன்னொரு ஆச்சரிய தகவல். அந்த வகையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20% வசூலை மலையாள சினிமா மட்டுமே கொடுத்திருக்கிறது. இந்த வருடத்திற்குள் இந்த வசூல் இரட்டிப்பு ஆவதற்கும் அதை தாண்டுவதற்கும் கூட நிறைய வாய்ப்புகள் உள்ளன என தாராளமாக சொல்லலாம்.