ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக சாவேர் திரைப்படம் உருவாகி உள்ளது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மூலம் பூவே உனக்காக புகழ் நடிகை சங்கீதா 9 வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி (நாளை) வெளியாவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் திடீரென அக்டோபர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவித்து இந்த முறை உண்மையாக என்று கூறி படத்தில் நடித்துள்ள சங்கீதாவின் கதாபாத்திர போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்..
இப்படி இவர்கள் ஒதுங்கியதற்கு காரணம் மம்முட்டி நடித்துள்ள கண்ணூர் ஸ்குவாட் என்கிற அதிரடி போலீஸ் படம் செப்டம்பர் 28ம் தேதி (நாளை) தான் வெளியாகிறது. இன்னொரு பக்கம் திடீரென தேதி மாற்றப்பட்ட சந்திரமுகி 2 படமும் இதே 28ம் தேதியை பிடித்துக் கொண்டதால் குஞ்சாக்கோபனின் படத்திற்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்தே தங்களது ரிலீஸ் செய்தியை அவர்கள் மாற்றி உள்ளனர் என்று வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.