நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? |
உலக அளவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் ஒன்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் 'செப்டிமியஸ்' விருது. 2023ம் ஆண்டின் விருது விழா கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்தது. இதனை நெதர்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆல்டர்மேன் டூரியா துவக்கி வைத்தார்.
ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த வரிசையில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது மலையாள நடிகர் டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டது. இதனை அவர் நெதர்லாந்து நாட்டிற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.
முன்னனி மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தமிழில் 'மாரி 2' படத்தில் வில்லனாக நடித்தார். இவர் நடித்த 'மின்னல் முரளி' படமும், '2018' படமும் பெரிய வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 2018 படம் 200 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்தது. இந்த படம்தான் தற்போது ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்ததாற்காகத்தான் ஆசியாவின் சிறந்த நடிகர் விருது டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டுள்ளது.