சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகி இருக்கும் படம் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். எப்போதுமே தெலுங்கில் வெளியாகும் படங்கள் சம்பந்தப்பட்ட முன்னணி ஹீரோக்கள் தங்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று படத்தை புரோமோட் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மானும் தற்போது பாலகிருஷ்ணாவில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அவரது வித்தியாசமான, ஜாலியான, கிடுக்குப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்று ஒரு புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படி பாலகிருஷ்ணா துல்கர் சல்மானிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கும் போது திடீரென ஒருவருக்கு வீடியோ கால் செய்து தனது மொபைலை திருப்பி அது யார் என காட்டுகிறார். அதில் நடிகர் மம்முட்டி லைனில் இருப்பது தெரிகிறது. இதை பார்த்தும் துல்கர் சல்மான் மட்டுமல்ல அங்கிருந்து பார்வையாளர்களும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். இந்த நிகழ்ச்சி நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது.