ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாள சினிமாவின் இளம் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம். 2016ம் ஆண்டு வெளியான 'கிஷ்மத்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து கும்பளாங்கி நைட்ஸ், வைரஸ், அஞ்சாம் பதிரா, ட்ரான்ஸ், மாலிக், மின்னல்முரளி, பீஷ்ம பருவம், ரோமாஞ்சம், கண்ணூர் ஸ்குவாட், மஞ்சும்மேல் பாய்ஸ், போகைன் வில்லாஉள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் தனது நீண்டநாள் காதலியான உத்ரா கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் பஹத் பாசில், நஸ்ரியா, பார்வதி, ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். உத்ரா கிருஷ்ணன் நடிகை பார்வதி ஜெயராமின் உறவினர்.