பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

தமிழ் சினிமாவின் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரது திரையுலக வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவர் மறைந்த இயக்குனர் பாலசந்தர். ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர். தனி கதாநாயகர்களாக உயர வேண்டும் என்ற காரணத்தால் இருவரும் பேசிக் கொண்டு இனி இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தனர்.
தற்போது 44 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். கமல்ஹாசன் தயாரிக்க, சுந்தர் சி இயக்க, ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அப்படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் பகிர்ந்த போது 'தலைவர் 173' என ரஜினி ரசிகர்கள் குறிப்பிடுவதைப் போலக் குறிப்பிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்திற்கு மேலாகவும் ரஜினி, கமல் சேர்ந்து நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.