பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புலி, இருமுகன் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்தவர் திபு தமீன்ஸ். இவர மகன் ஹிருது ஹாருன் 'தக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கேன்ஸ் விருது பெற்ற "ஆல் வி இமேஜின் அஸ் லைட்", "மும்பைகார்" ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'முரா' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
"ஜன கண மன" மற்றும் "டிரைவிங் லைசென்ஸ்" படப் புகழ் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை "கப்பேலா" படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்குகிறார். கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ், அனுஜித் கண்ணன், யேது கிருஷ்ணா, பி.எல்தேனப்பன், விக்னேஷ்வர் சுரேஷ், கிரிஷ் ஹாசன், சிபி ஜோசப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.