மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான பிருத்விராஜ் முதன்முறையாக இயக்கிய படம் 'லூசிபர்'. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் அடுத்த பாகம் தற்போது 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன், இயக்குனர் பாசில், சச்சின் கெடேகர், கலாபவன் சாஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். தீபக் தேவ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.