சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! | தமன்னாவின் நடனத்திற்கு தடை போட்ட ஹரிஹரன்-சங்கர் மகாதேவன் அன் கோ | இவர்தான் பஹத் பாசிலா ? 'புஷ்பா 2' பார்த்த நடிகைக்கு வந்த சந்தேகம் | ஹேக் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாட்ஸ்அப் கணக்கு | ஹீரோவை கைகுலுக்க மறந்த ஹீரோயின் ; தொடரும் கைகுலுக்கல் கலாட்டா காமெடி |
நடிகர் மோகன்லால் நடிப்பில் ஏற்கனவே இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் ரம்பான் என்கிற படமும், இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து முதன்முறையாக தானே இயக்கியுள்ள பரோஸ் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தவிர பிரித்விராஜ் டைரக்ஷனில் நடிக்கும் எம்புரான் மற்றும் தெலுங்கில் சிறப்பு தோற்றங்களில் நடிக்கும் விருஷபா மற்றும் கண்ணப்பா என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதே சமயம் மிக குறுகிய காலத்தில் தயாராகும் விதமாக மோகன்லால் நடிக்கும் 360வது படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஷோபனா இந்த படத்தில் மீண்டும் மோகன்லால் உடன் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, பாலக்காடு, தேனி மற்றும் தொடுபுழா ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சமீப நாட்களாக தொடுபுழாவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் பழைய அம்பாசிடர் கார் ஒன்றை மிகவும் நேசிக்கும் சண்முகம் என்கிற டாக்ஸி ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மோகன்லால்.