தமிழில் வெளியாகும் சூப்பர் மேன் | ‛கல்லுக்குள் ஈரம்' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு | 'சரிகமப' வெற்றியாளர்களுக்கு பரிசு தொகை அறிவிப்பு | ஏதோ ஒரு விஷயம் இருக்கு : "யாதும் அறியான்" படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர், சிவாஜி எனும் இரு மலைகளுக்கு இடையில் பிரகாசித்த சூரியன் | பிளாஷ்பேக் : 200 ரூபாய்க்கு டப்பிங் பேசிய சிவாஜி | உதவி இயக்குனர்கள் உதவிகளை நினைவு கூர்ந்த இயக்குனர் ராம் | தனுசின் 2 படங்கள் ரீ ரிலீஸ்: என்ன காரணம் தெரியுமா? | மகள் திருமணத்துக்கு அழைக்காமல் வந்தவர்கள்: தலைவாசல் விஜய் சொன்னது புதுக்கதை | 25 லட்சத்தில் தயாரான 'மாயக்கூத்து'; சம்பளம் குறைவாக வாங்கிய டில்லி கணேஷ் |
ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படமாக உருவாகியுள்ளது தேவரா. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயீப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து ஹைதராபாத், சென்னை என சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது தேவரா படக்குழு. இந்த நிலையில் தேவரா படத்தின் தயாரிப்பாளர், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் கொரட்டாலா சிவா ஆகியோருடன் துல்கர் சல்மான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், “புதிய ஆரம்பம் செப்டம்பர் 27ல் துவங்க இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தேவரா படக்குழுவினருடன் துல்கர் சல்மான் கைகோர்த்துள்ளது எதற்காக என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கேரளாவில் நடைபெறும் இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதற்காகவோ அல்லது துல்கர் சல்மான் தனது வே பாரர் நிறுவனம் மூலம் தேவரா படத்தை கேரளாவில் வெளியிடவோ இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.