'விடாமுயற்சி' முதல் பார்வை : விதவிதமான விமர்சனங்கள் | மூன்று படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் தோன்றும் விஜயகாந்த் | கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன் : பாடலாசிரியர் விவேகா வெளியிட்ட பதிவு | கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | கெட்டவனை அழிக்ககூடாது, கெட்டதைத்தான் அழிக்க வேண்டும் : விஜய் ஆண்டனி | 'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சோனாக்ஷி படம் | மம்தா மோகன்தாஸிற்கு சரும நோய் பாதிப்பு | டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் தேவதூதன் | ஓட்டு குறைவாக வாங்கினாலும் திரிஷ்யம் நடிகைக்கு மீண்டும் கிடைத்த பதவி |
மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான படங்களில் ககனாச்சாரி படமும் ஒன்று. அனு சந்து என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் காமெடி படமாக உருவாகி இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் தரமான வி.எப்.எக்ஸ் பணிகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வருகிறது.
தற்போது படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ககனாச்சாரி யுனிவர்ஸ் என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வென்று திருச்சூர் எம்பி ஆக வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபியும் இந்த இரண்டாம் பாகத்தில் மணியன் சித்தப்பா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் தனது பிறந்த நாளன்று இந்த படத்தில் தனது கதாபாத்திர போஸ்டருடன் கூடிய அறிவிப்பை சுரேஷ்கோபியே வெளியிட்டார். இதன் முதல் பாகத்தில் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்ததால், அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் படக்குழுவினரை உற்சாகப்படுத்தவும் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சுரேஷ்கோபி ஒப்புக்கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.