பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
திருவனந்தபுரம் : மத்திய அமைச்சராக நேற்று (ஜூன் 9) பொறுப்பேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள சுரேஷ் கோபி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி. பா.ஜ., கட்சியில் உள்ள இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு கேரளாவில் பா.ஜ.வின் முதல் லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வானார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர்கள் 71 பேர் பதவியேற்றனர். இதில் சுரேஷ் கோபியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால், 'திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்' என்று சுரேஷ் கோபி தெரிவித்ததாக செய்தி பரவியது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ்கோபி, அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது : மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்கு பெருமை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ளேன் என விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.