பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மம்தா மோகன் தாஸ். தற்போது அதிக படங்களில் நடித்து வருபவரும் அவர்தான். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இங்கு ஒரு சில படங்களில் நடித்த அவர் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் மலையாள சினிமாவிற்கு சென்று விட்டார். கடைசியாக விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான 'மகாராஜாவில்' நடித்திருந்தார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அவர் எப்பொழுதுமே இன்னல்களை சந்தித்து வருகிறார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். பின்னர் புற்று நோயுடன் போராடி வென்ற அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். பூரண குணம் அடைந்த பிறகும் மீண்டும் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்தும் மீண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் விட்லிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். திட்டு திட்டாக தோல் நிறம் மாறும் இந்த நோய்க்கு கடந்தாண்டு இவர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொற்று நோயும் அல்ல. ஆண்டுதோறும் ஜூன் மாதம் விட்டிலிகோ தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்த போட்டோவை மம்தா பதிவிட்டுள்ளார்.