நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள திரையுலகில் நடிகர் சங்கம் அம்மா என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக இதன் தலைவராக இருந்த நகைச்சுவை நடிகர் இன்னசன்ட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானதை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவி வகித்து வருகிறார். நீண்ட நாட்களாக இந்த சங்கத்தில் துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த நடிகர் இடவேள பாபு சமீபத்தில் இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தான் ஓய்வு பெறுவதாக கூறினார்.
இந்த நிலையில் அடுத்த தலைவராக சமீபத்தில் மீண்டும் நடிகர் மோகன்லாலும், பொருளாளராக முதன்முறையாக நடிகர் உன்னி முகுந்தனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பொதுக்குழுவிற்கான 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கமிட்டி உறுப்பினர்களாக இருந்த நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சரயு ஆகியோருக்கு ஓட்டுக்கள் குறைவாக விழுந்தன. அதே சமயம் 11 பேரில் 4 பேர் பெண்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் இருக்கிறது.
வேறு பெண்கள் யாரும் இந்த கமிட்டி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடாததால் மீண்டும் அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சரயு ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 11 பேரில் 10 பேர் மட்டுமே தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் 11வது நபரை தேர்வு செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை அன்சிபா ஹாசன், திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.