பிளாஷ்பேக் : “16 வயதினிலே” தந்த பன்முகத் திரைக்கலைஞர் பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் | விஜய்யுடன் போட்டோ : பூஜாவை விட 'லைக்குகளை' அள்ளிய மமிதா | சோலோ ஹீரோயின் ஆனார் சம்யுக்தா : போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் | ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க பூமிகா மறுத்தாரா? - இயக்குனர் விளக்கம் | சிவாஜி - விஜய் பட தலைப்பில் அர்ஜூன் தாஸ் - அதிதி படம் | அக். 7ல் வெளியாகும் பிளடி பெக்கர் டீசர் | அக்., 5, ‛சேவ் தி டேட்டிற்கு' விடை கிடைத்தது : இயக்குனர் ஆனார் வனிதா | சாதி, மதம் மனிதனை வெறுக்க செய்யும்... பயணமே சிறந்த கல்வி - அஜித் அட்வைஸ் | ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம் | டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி? |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆவேசம். ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் ஒரு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தற்போது பெயின் கிளி என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர். ஆவேசம் படத்தில் பஹத் பாசில் நடித்த ரங்கன் கதாபாத்திரத்திற்கு வலது கையாக அம்பானி என்கிற ரவுடியாக நடித்திருந்த சஜின் கோபு இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு படக்குழுவினரால் பல்வேறு வித சிரமங்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
அது மட்டுமல்ல மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை கூட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்துவதற்கு பயன்படுத்தினார்கள் என்றும் படப்பிடிப்பிற்காக மின்விளக்குகளில் வெளிச்சத்தை கட்டுப்படுத்தினார்கள் என்றும் இதனால் நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட்டது என்றும் மனித உரிமை ஆணயத்துக்கு புகார் சென்றது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய சுகாதார அதிகாரிகள் அனைவருக்கும் இது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது மனித உரிமை ஆணையம். அதேசமயம் மலையாள தயாரிப்பாளர் சங்கமோ தாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு பணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி உள்ளோம் என்று கூறியுள்ளது.