புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. மகாபாரதத்தை மையப்படுத்தி ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். சர்ப்ரைஸ் ஆக விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் ஆகியோரும் சில நிமிடங்களே வந்து போகும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள். அதே போல மகாநடி படத்தில் மைய கதாபாத்திரமாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷூம் நாக் அஸ்வினின் நட்புக்காக தன் பங்கிற்கு இந்த படத்தில் இடம்பெறும் புஜ்ஜி என்கிற ரோபோ காருக்கு குரல் கொடுத்துள்ளார்.
தமிழில் மட்டுமல்ல இந்த படத்தின் மலையாள வெர்சனிலும் அவரே குரல் கொடுத்துள்ளார். அதேசமயம் ஒவ்வொரு மொழிக்கும் டப்பிங்கின் போது வசனகர்த்தாக்கள் அங்குள்ள பேமஸான விஷயங்களை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஹத் பாசிலின் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தில் அவர் பேசும் 'எடா மோனே' என்கிற வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. தற்போதும் ரீல்ஸ் வீடியோக்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசனத்தை கல்கி படத்தின் டப்பிங்கில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். இந்த வசனம் வரும் காட்சியில் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களிடம் பலத்த கைதட்டலையும் பெற்றுள்ளது.