சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் |

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் அர்ஜுன் இயக்கத்தின் தெலுங்கில் அவர் ஒரு படம் நடிப்பதாக ஒப்புக் கொண்டு கடைசி நேரத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு வராமல் படத்திலிருந்து விலகிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் இவரது நடிப்பில் வெளியான காமி திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.
இதற்கிடையே கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்கிற படத்திலும் நடித்துள்ளார் விஸ்வக் சென். இந்த படத்திற்காக ஏற்கனவே மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் சில காரணங்களால் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்று கூட இந்த படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மே 31ம் தேதிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரிலீஸ் தேதியை நடிகர் விஸ்வக் சென் வித்தியாசமான முறையில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். அதாவது சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேசம் படத்தில் பஹத் பாசில் ஒரு தூணுக்கு பின்னால் நின்றுகொண்டு தூணில் இருபுறமும் தனது முகத்தை புன்னகையோடும் சீரியஸாகவும் மாற்றி மாற்றி காட்டுவார் அதே பாணியில் விஸ்வக் சென்னும் இந்த படத்தில் ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி தள்ளிப் போனதையும், தற்போது புதிய ரிலீஸ் தேதி குறித்தும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.




