நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியவர். கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய நேர் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஜீத்து ஜோசப். பிரபல தயாரிப்பு நிறுவனமான e4 தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நேர் திரைப்படத்தில் கதாசிரியராக பணியாற்றியதோடு அந்த படத்தில் வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனரான சாந்தி மாயாதேவி தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். சமீபத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் நடிப்பதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தி உள்ளது.