ஹேப்பி என்டிங் ஆர். ஜே. பாலாஜியின் புதிய படம்! | அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியாகும் இளையராஜாவின் சிம்பொனி இசை | ‛கேம் சேஞ்சர்' டீசர் தேதியை அறிவித்த படக்குழு | ஓடிடிக்கு வரும் ரஜினியின் வேட்டையன் | ‛பாட்டல் ராதா' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் | 48வது படம் : சிம்பு எடுத்த முடிவு | ஜெய் ஹனுமான் ஆக ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ஒரு காதல் வந்திருக்கு : மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா | புது பாடகர்கள், கவிஞர்களை தேடுகிறேன் : 'பற பற பற பறவை' ரகுநந்தன் |
மலையாள திரையுலகில் சமீப நாட்களாக நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் அவரை வைத்து ‛வழக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ள சனல்குமார் சசிதரன் ஆகியோருக்கு இடையே இந்த படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்தாலும் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டதால் தனது இமேஜ் பாதிக்கும் என்று இந்த படத்தை வெளியிட டொவினோ தாமஸ் மறுக்கிறார் என்று சணல்குமார் சசிதரன் குற்றம் சாட்டினார். ஆனால் தியேட்டரில் வெளியிட்டால் இந்த படத்திற்கு நட்டம் வரும் என்றும் அதே சமயம் இயக்குனர் மீது உள்ள கெட்ட பெயரால் ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க மறுக்கின்றன என்று விளக்கம் அளித்து இருந்தார் டொவினோ தாமஸ்.
இந்த நிலையில் டொவினோ தாமஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார் என்கிற ஆத்திரத்தில், “ஒரு படம் என்பது பூட்டி வைப்பதற்காக அல்ல.. ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்காகத்தான்..” என்று கூறி இதன் பிரிவியூ காபி லிங்க்கை தனது பேஸ்புக் பக்கத்தில் தயாரிப்பாளரின் அனுமதி இன்றி சமீபத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் இயக்குனர் சணல்குமார். இவரது செயல் படத்தின் தயாரிப்பாளர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காப்பிரைட் சட்டத்தின்படி அவரது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த படத்தின் பிரிவியூ காப்பி நீக்கப்பட்டது. மேலும் வழக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் அனுமதி இன்றி இயக்குனர் இப்படி படத்தின் பிரிவியூ காப்பியை பொதுவெளியில் வெளியிட்டது குறித்து அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.